பெண் ஊழியருக்கு போன் டார்ச்சர்டிரைவர் கைது
தாம்பரம்: ஊட்டியை சேர்ந்தவர் விஜயதா (21). கிண்டியில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டுமானால் தனியார் கால் டாக்சி பிடித்துதான் செல்வார். மேலஅயனம்பாக்கம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த முருகன் (28) என்பவர் தொடர்ச்சியாக அவரை அழைத்து சென்றார். விஜயதாவின் செல்போன் நம்பர் முருகனுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு தினமும் போன் செய்து விஜயதாவின் அழகை வர்ணித்து தொந்தரவு செய்துள்ளார். விஜயதா, கிண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து நேற்று முருகனை கைது செய்தனர்.