மலையாள இயக்குனர்கள் மீது பூர்ணா புகார்
துரோகி, வித்தகன் போன்ற படங்களில் நடித்தவர் பூர்ணா. அவர் கூறியதாவது:தமிழில் கனமான கதாபாத்திரங்கள் எனக்கு வருகின்றன. அதேபோல் தெலுங்கு படங்களிலும் வருகிறது. எனது சினிமா பயணம் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்களை பொறுத்தவரை பக்கத்து வீட்டு பெண் போன்று இமேஜுடன்தான் என்னை எண்ணுகிறார்கள். அதற்கு காரணம் நான் கிளாமர் வேடங்களில் நடிக்காததுதான். ரசிகர்கள் மனதில் அப்படி இடம் பிடித்திருப்பதும் மகிழ்ச்சிதான். மலையாளத்தை பொறுத்தவரை நிறைய மலையாள நடிகைகள் திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மலையாள பட இயக்குனர்கள் வேறு மாநிலங்களை சேர்ந்த நடிகைகளைத்தான் தங்கள் படங்களில் நடிக்க தேர்வு செய்கிறார்கள். ராஜாதி ராஜா மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். தொடர்ந்து அதேபோல் ஆட வாய்ப்பு வருகிறது. குத்து பாடல் ஆட்டம் ஆடும் நடிகை என்ற பெயரை சம்பாதிக்க எனக்கு விருப்பமில்லாததால் அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டேன். இன்னொருமுறை அப்படி ஆட சம்மதித்தால் அந்த ஆண்டு முழுவதும் என்னை குத்தாட்ட நடிகையாகவே ஆக்கிவிடுவார்கள்.இவ்வாறு பூர்ணா கூறினார்.