மெல்போர்ன்: உலக கோப்பை காலிறுதிப்போட்டிகளில் பணியாற்ற உள்ள அம்பயர்கள் யார் என்பதை ஐசிசி நேற்று அறிவித்துள்ளது.மெல்போர்னில் 19ம் தேதி இந்தியா-பங்களாதேஷ் மோதும் காலிறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தின் இயான் கவுல்ட், பாகிஸ்தானின் அலீம் தர் ஆகியோர் கள நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது அம்பயராக ஸ்டீவ் டேவிசும், நான்காவது அம்பயராக பால் ரெய்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரோஷன் மகாநாமா மேட்ச் ரெப்ரியாக செயல்படுவார். சிட்னி மைதானத்தில் நாளை நடைபெறும் இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் காலிறுதிப்போட்டிக்கு ராட் டக்கர், நைஜில் லாங் ஆகியோர் கள அம்பயர்களாக செயல்படுவார்கள். ரிச்சர்டு கெட்டில்புரோ மூன்றாவது அம்பயராகவும், புரூஸ் ஆக்சன்போர்டு நான்காவது அம்பயராகவும் செயல்படு வார்கள். மேட்ச் ரெப்ரியாக டேவிட் பூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
20ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள ஆஸ்திரே லியா-பாகிஸ்தான் அணி கள் மோதும் காலிறுதிப்போட்டிக்கு மரியஸ் எராஸ் மஸ், குமார் தர்மசேனா ஆகியோர் கள அம்பயர்களாகவும், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மூன்றாவது அம்பயராகவும், பில்லி பவுடன் நான்காவது அம்பயராகவும், ரஞ்சன் மடுகல்லே மேட்ச் ரெப்ரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.வெலிங்டனில் 21ம் தேதி நடைபெறும் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் மோதும் கடைசி காலிறுதி ஆட்டத்துக்கு ரிச்சர்ட் கெட்டில்புரோ, புரூஸ் ஆக்சன்போர்டு கள அம்பயர்களாகவும், ராட் டக்கர் மூன்றாவது அம்பயராக வும், நைஜில் லாங் நான் காவது அம்பயராகவும் கிறிஸ் பிராடு மேட்ச் ரெப்ரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.