நாகர்கோவில்: நாகர்கோவில் வேதநகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன், நாகர்கோவிலில் உள்ள பிரபல பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 13ம் தேதி மதியம் திடீரென சிறுவனை காணவில்லை. அவனை பற்றி விசாரித்தபோது இருளப்புரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22) என்பவரும், அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து சிறுவனை பைக்கில் தூக்கி சென்றது தெரியவந்தது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், சிறுவனை தேடி கண்டுபிடித்தனர். அவனிடம் விசாரித்தபோது சந்தோஷ் உள்ளிட்ட சிலர் தன்னை தூக்கி சென்று ஆடைகளை அவிழ்த்து ஹோமோ செக்ஸில் ஈடுபட்டதாக கூறினான்.இது குறித்து கோட்டாறு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தோஷ் உள்ளிட்ட சிலர் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தாயார் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக உள்ளார்.