ஹீரோ கொடுத்த வாய்ப்பு நிகிஷா இன்ப அதிர்ச்சி
' தலைவா' , ' என்னமோ ஏதோ' படங்களில் நடித்திருப்பவர் நிகிஷா படேல். இவர் தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ' கோமரம் புலி' படத்தில் நடித்தார். அப்படம் வெற்றி பெறவில்லை. அடுத்தடுத்து இவர் நடித்த படங்களும் தோல்வியை தழுவியதால் வருத்தத்தில் இருந்தார். ஆனாலும் மீண்டும் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக பவன் கல்யாண்கூறி இருந்தார். சமீபத்தில் நிகிஷா படேலுக்கு செல்போனில் ஒரு அழைப்புவந்தது. மறுமுனையில் பவன் கல்யாண்பேசினார். ' நான் நடிக்கும் கப்பர் சிங் 2ம் பாகம் படத்தில் குத்து பாடலுக்கு நீ ஆட வேண்டும்' என்றார். ஹீரோவே பர்சனலாக தன்னிடம் பேசியதால் இன்ப அதிர்ச்சி அடைந்த நிகிஷா, மறுப்பேதும் சொல்லாமல் ஆட ஒப்புக்கொண்டார். கடந்த 2 வருடமாக இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வந்தபோதிலும் பட விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக கூட தகவல் வெளியானது. ஆனால் படம் டிராப் ஆகவில்லை ஷூட்டிங் தொடங்க தாமதமாகிறது என்று பட வட்டாரம் தெரிவிக்கிறது.