வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க மாநாடு
செங்கல்பட்டு: தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு செங்கல்பட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. சங்க மாநில ஆலோசகர் முருகையன், முன்னாள் மாநில பொருளாளர் கணபதி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். மாநாட்டுக்கு மாநில தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் வேல்முருகன், பொருளாளர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தனர். வரவேற்பு குழு தலைவர் தங்கராஜ் வரவேற்றார். மாநில துணை தலைவர் அப்பர் தொடக்க உரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார், செங்கல்பட்டு ஆர்டிஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். மாலை கருத்தரங்கம் நடைபெற்றது.
‘கிராம உதவியாளர்கள் அன்றும், இன்றும்‘ என்ற தலைப்பில் முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமாரும், ‘அரசு ஊழியர்களின் எதிர்காலம்‘ என்ற தலைப்பில் தென்மண்டல பொதுச்செயலாளர்சுவாமிநாதனும் பேசினர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.2ம் நாள் மாநாடு நேற்று நடந்தது. மாலையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாநாட்டு பேரணி புறப்பட்டு மேமையூர் ஏரி திறந்தவெளி மாநாட்டு திடலை அடைந்ததும் முடிவடைந்தது.