விறுவிறுப்பாக நடந்து வரும் உலக கோப்பை தொடரில் நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது. கடைசி லீக் போட்டியில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. அடிலெய்டில் நடக்கும் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா காலிறுதிக்கு முன்னேறி விட்ட நிலையில், மற்ற இரண்டு இடங்களுக்கு பாகிஸ்தான், அயர்லாந்து, வெஸ்ட் இண் டீஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி காணப்படுகிறது. பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் 6 புள்ளிகளுடன் இருந்தாலும், ரன் ரேட்டில் பாகிஸ்தான் முன்னணியில் உள்ளது. பாகிஸ்தான்- அயர் லாந்து போட்டியில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு முன்னேறிவிடும். தோற்கும் அணிக்கு, வெஸ்ட் இண்டீஸ்- யுஏஇ அணியுடனான போட்டியின் முடிவு மற்றும் ரன் ரேட்டை பொறுத்தே காலிறுதி வாய்ப்பு அமையும்.
இந்த சிக்கல்களில் சிக்கி கொள்ளாமல், வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன் னேறி விட இரு அணிகளும் முயற்சிக்கும். அயர்லாந்தை விட பாகிஸ்தான் வலுவாகவே உள்ளது. சர்பிராஸ் அகமது, அகமது செஷாத், யூனுஸ் கான், கேப்டன் மிஸ்பா, மக்சூத், அப்ரிடி, கம்ரான் அக்மல் என பேட்டிங்கிற்கு ஒரு படையே உள்ளது. ஆனால் இதுவரை கம்ரான் அக்மல், அப்ரிடி, யூனுஸ்கான் குறிப்பிடும்படி விளையாடவில்லை. பந்து வீச்சில் இர்பான், ரகத் அலி, வகாப் ரியாஸ், சோகைல்கான் அசத்தலாம். அயர்லாந்து அணியிலும், கேப்டன் போர்ட்டர்பீல்டு, ஸ்டிர்லிங், நியால் மற்றும் கெவின் ஓ பிரையன், ஜான் மூனி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
2007 உலக கோப்பையில் அயர்லாந்து அளித்த அதிர்ச்சி தோல் வியை பாகிஸ்தான் வீரர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த தோல்விக்கு பழி தீர்க்கவும் பாகிஸ்தான் முயலும். அயர்லாந்தின் ரன் ரேட் மைனஸில் இருப்பதும், வெஸ்ட் இண்டீஸ்-யுஏஇ போட்டியின் முடிவு வெஸ்ட் இண்டீசுக்கு சாதகமாக அமையாலாம் என்பதாலும், வெற்றி பெற்றே ஆக வேண்டிய நெருக்கடியில், அயர்லாந்து சிக்கியுள்ளது.