காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக வி.ஆர். சிவராமன் நியமனம்
சென்னை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக வி.ஆர். சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.சிவராமன், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தாம்பரம் பெருநகராட்சியில் நகர மன்ற உறுப்பினராக இரண்டு முறை வெற்றி பெற்ற இவர், நகர் மன்ற காங்கிரஸ் குழு தலைவராகவும் உள்ளார்.ஒரு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டு பொறுப்புகளில் இருந்தவர். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி, நேரு யுவகேந்திரா, தொலைதொடர்பு போன்ற துறைகளில் ஆலோசனைகுழு உறுப்பினராக செயல்பட்டவர். அவரது தந்தையார் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புதுப்பட்டு ஊராட்சி மன்றத்தில் 5 முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.