மருத்துவ பேராசிரியைக்கு பாலியல் தொல்லை : டாக்டர் கைது
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பயாலஜி துறையில் அஜீத்சவுத்ரி என்பவர் டாக்டராக பணி புரிந்து வருகிறார். இவர் அதே துறையில் மருத்துவ பேராசிரியையாக பணி புரிந்து வரும் ஒரு பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பேராசிரியை, டாக்டரை கண்டித்துள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாத டாக்டர், தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து திருப்பதி முதலாவது காவல் நிலையத்தில் பேராசிரியை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், அஜீத் சவுத்ரியை கைது செய்து திருப்பதி 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் அஜய் சவுத்ரியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் அவரை திருப்பதி கிளை சிறையில் அடைத்தனர்.