சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
கரூர்- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட் டம் அரவக்குறிச்சி தாலுகா சாலிபாளையத்தில் வசித்தவர் ராஜன்(35). இவர், பவித்திரம் பூபாளியை சேர்ந்தவர். கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்படி, க.பரமத்தி போலீசார் வழக்கு பதிந்து ராஜனை கைது செய்தனர். இவ்வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி குணசேகரன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்தார். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் ராஜன் அடைக்கப்பட்டு உள்ளார்.