உலக கோப்பை தொடரில் நாளை நடக்கும் லீக் போட்டியில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பெர்த்தில் நடக்கும் போட்டி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவை பொறுத்த வரை, நியூசிலாந்துடனான தோல்வியில் இருந்து மீண்டு வர முயற்சிக் கும். நியூசிலாந்து வேகத்தாக்குதலில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிலை குலைந்து போனார்கள். இதனால் ஆஸ்திரேலியா உலக கோப்பையை கைப்பற்றும் என்ற பார்வையில் சற்றே மாற்றம் ஏற்பட்டுள் ளது. தற்போது ஆஸ்திரேலியா, கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது. பேட்டிங்கில், வார்னர், பின்ச், சுமித், கேப் டன் மைக்கேல் கிளார்க், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜான்சன் அசத்த லாம். பெர்த் மைதானம் ஜான்சனுக்கு ராசியான மைதானங்களில் ஒன்று. இதனால் ஜான்சன் விக்கெட் வேட்டை நடத்தலாம்.
காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத னால் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் தனது முதல் போட் டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்தை வீழ்த்தி, உலக கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த உற்சாகத்தில் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது. ஸ்காட்லாந்துடன் கலக்கிய சமி யுல்லா ஷென்வாரி, ஆப்கானிஸ்தானியர்களின் ஹீரோ வாக உருவெடுத்துள்ளார். மற்றபடி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில், ஆஸ்திரேலியாவை விட ஆப்கானிஸ் தான் மிகவும் பின்தங்கியே உள்ளது. இருந்த போதும், ஆஸ்திரேலியாவுக்கு நெருக் கடி கொடுக்க ஆப்கானிஸ் தான் கடுமையாக போரா டும் என எதிர்பார்க்கலாம்.