நிலக்கோட்டை: நிலக்கோட்டை பகுதியில் வாடாமல்லி அமோக விளைச்சல் கண்டுள்ள நிலையில், அதன் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ராயப்பன்பட்டி, கோட்டுர், தோப்புபட்டி, தம்பிநாயக¢கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் புடலங்காய் விவசாயம் நடந்து வந்தது. தொடர்ச்சியாக பருவமழை குறைந்து வந்ததால் புடலங்காய் விளைச்சல் கண்ட பெரும்பாலான விவசாய நிலங்கள் தரிசாக கிடந்தன.சமீபத்தில் பெய்த பருவமழையால் கிணற்றுப் பாசனம் இல்லாத பெரும்பாலான விவசாயிகள் வாடாமல்லி பூக்கள் விவசாயத்தில் இறங்கினர். தற்பொழுது வாடாமல்லி அதிகளவில் விளைச்சல் கண்டுள்ளதை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீடிக்கும் முன் இடி இறங்கியது போன்று விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: 3 வருடங்களாக பருவமழை இல்லாததால் வாடாமல்லி பூக்களின் விளைச்சல் பெருமளவு குறைந்தது. அதனால் வாடாமல்லி விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானோம். இவ்வருடம் பெய்த பருவமழையால் பெரும்பாலான விவசாயிகள் வாடாமல்லி பூக்களையே பயிரிட்டுள்ளோம். எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இப்பொழுது பூக்கள் அதிகளவு பூத்து குலுங்குகின்றன. விளைச்சல் அதிகமானதால், கடந்த மாதம் கிலோ ரு.20க¢கு விற்பனையான பூக்கள் தற்பொழுது கிலோ ரூ.5க¢கு விற்பனையாகிறது. அதிக மகசூல் இருந்தும் விலை இல்லாததால் எங்களுக்கு கூலி கூட மிஞ்சவில்லை. இதனால் பூக¢களை பறிக¢காமல் செடியிலேயே விட்டுள்ளோம். ஆடு, மாடுகளுக்கு இந்த பூச்செடிகள் தீவனமாக பயன்படாது என்பதால் தீ வைத்து எரிக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.