Untitled Document
2011
18
May
விமான போக்குவரத்து மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ


ஐதராபாத்தில் NALSAR சட்ட  பல்கலைக்கழகமும், Institute   of Applied Aviation Management இணைந்து விமான போக்குவரத்து சார்ந்த முதுநிலை படிப்புகளை வழங்கி வருகின்றன. நடப்பாண்டில் இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. விமான போக்குவரத்து துறையில் பணிபுரியும் எக்சிகியூட்டிவ்கள், பைலட்கள், டிராபிக் கன்ட்ரோலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பதவி உயர்வு பெற இப்படிப்பு உதவியாக இருக்கும்.
Post Diploma in Aviation Law and Air Transport Management   (PGDALATM) என்றழைக்கப்படும் இந்த ஓராண்டு கால முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர விரும்புபவர்கள் பிஇ/எம்பிஏ/சட்டப்படிப்பு ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.

குழு விவாதம், நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் படிப்புக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பெங்களூர், ஐதராபாத், மும்பை, டெல்லி, ஷார்ஜா (யுஏஇ) உள்ளிட்ட முக்கிய இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. பயிற்சி வரும் ஜூன், ஜூலையில் ஆரம்பமாகும். பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை www.nalsar.ac.in அல்லது www.iaam.ac.in இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500ஐ ‘ Institute of Applied   Aviation   Management' என்ற பெயரில்   கோழிக்கோட்டில் (காலிகட்) மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும்.

பூர்த்தி   செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண் டிய முகவரி, மாணவர் சேர்க்கை இடங்கள், கல்விக்கட்டணம்  , விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,