Untitled Document
2011
18
May
பிளஸ்2 முடித்தவர்களுக்கு கடல்சார் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ, பட்டப்படிப்புகள்


கடல்சார் படிப்புகளை நிறைவு செய்தவர்களுக்கு உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஊதியமும் கைநிறைய கிடைக்கிறது. இதனால் இப்படிப்புகளுக்கு மவுசு அதிகம். இந்தியாவில் சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் மட்டுமே கடல்சார் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தை பொருத்தவரை மத்திய அரசின் கடல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இக்கல்வியாண்டுக்கான (2011&12) மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இங்கு டிப்ளமோ இன் நாட்டிகல் சயின்ஸ் (டிஎன்எஸ்), பிஎஸ்சி ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர், பிடெக் மரைன் இன்ஜினியரிங்   ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

பிளஸ் 2 பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல், கணித பாடங் களை தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அகில இந்திய அளவில் நடைபெறும் பொது நுழைவுத்தேர்வு  மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். IMUCET2011 என்றழைக்கப்படும்    இந்த நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 19ம் தேதி முக்கிய இடங்களில் நடைபெறும்.  விண்ணப்ப கட்டணமாக   ரூ.800 (எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.450) செலுத்த வேண்டும். கட்டணத்தை ‘Indian Maritime University‘ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும்.

www.imu.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கட்டண டிடி, தேவையான சான்றிதழ்களின் சான்றொப்பம்   பெறப்பட்ட நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது ‘Application for IMUCET, June 2011 for DNS Leading to B.Sc. Nautical Science or B.Tech (Marine Engi neering)/ B.Sc. Ship   Building and Repair' என ஆங்கிலத்தில் குறிப்பிடவும்.

பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வரும் மே 27க்குள் 'The Controller   of    Examinations, Indian Maritime University, East Coast Road, Uthandi, Chennai  600119‘  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதர விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,