உத்திரமேரூர் அருகே வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்த நாள் விழா
உத்திரமேரூர்: மறைந்த முன்னாள் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரும், தமிழக காங்கிரஸ் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் 75வது பிறந்தநாள் விழா உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.ஒரக்காட்பேட்டை முருகவேல் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தேவராஜ், மணி முன்னிலை வகித்தனர். அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநில தலைவர் எம்.உசேன், வாழப்பாடி படத்திற்கும், முன்னாள் மாவட்ட தலைவர் சி.ராமசாமி, காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.