Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
09
Jan
திமுக தீர்மானம் காங். வரவேற்பு


சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமானவரி வழக்கு  முடிவுக்கு வந்துள்ளது. நீதிபதி அளித்த தீர்ப்பை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், 17 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில், நீதிமன்றத்தில் நூறு முறைக்கு மேல்  விசாரணைக்கு வந்துள்ளது. ஆனால் ஒரு விசாரணையில் கூட ஜெயலலிதாவோ, சசிகலாவோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சாதாரண மக்களுக்கு இதுபோன்ற  சலுகை தர வருமானவரித்தறை முன்வருமா? பாஜ அதிமுகவை தன்பக்கம் இழுப்பதற்காக மோடி அரசின் நீதித்துறை எடுத்த முயற்சியால் இந்த தீர்ப்பு வென்றுள்ளதா?  என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழும்பியுள்ளது. லஞ்சம், ஊழல் மிகுந்த அரசாக தமிழக அரசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, திமுக பொதுக்குழுவில்  மதவாத சக்திகளை முறியடிக்க மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே என அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, மதசார்பற்ற கட்சிகள்  ஒருங்கிணைய வேண்டும் என திமுகவில் இருந்து அழைப்பு வந்தால், அதை நாங்கள் கண்டிப்பாக பரிசீலிப்பதோடு வரவேற்போம்‘‘ என்றார்

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement