போலீஸ்காரருக்கு ‘பளார்’ போதை ஆசாமி கைது
ஆலந்தூர்: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பிரிவு காவலராக வேலை செய்பவர் ஜெயபிரகாஷ் (32). இவர், நேற்று மாலை வேலை முடிந்து ஆலந்தூர் கண்ணன் காலனி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நாகப்பன் (32) என்பவர், குடிபோதையில் ஜெயபிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நாகப்பன் திடீரென ஜெயபிரகாஷ் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதுபற்றி ஜெயபிரகாஷ் பரங்கிமலை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகப்பனை கைது செய்தனர். பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.