Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
09
Jan
நேதாஜி குறித்த உண்மை வெளியானால் சர்வதேச உறவுகள் பாதிக்கும்: மத்திய அரசு கருத்து

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

புதுடெல்லி: இந்திய சுதந்திர போராட்டத்தின் இறுதி கட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாயமானார். அவர் உயிரிழந்தாரா அல்லது மரணம் அடைந்தாரா என்பது இன்று வரை மர்மமாக உள்ளது. அவர் என்ன ஆனார் என்பது குறித்து 87 முக்கிய ஆவணங்கள் உள்ளன. அவற்றை வெளியிட்டால், வெளிநாடுகளுடனான இந்தியாவின் சர்வதேச உறவுகள் பாதிக்கும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் கருத்து தெரிவித்தார்.இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவ படையை நிறுவினார். ஜெர்மனி நாட்டின் உதவியுடன் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். சுதந்திர போராட்டத்தின் இறுதி கட்டத்தில் அவர் மாயமானார். அவர் விமான விபத்தில் உயிரிழந்தாக ஒரு தகவல் கூறுகிறது. அவர் என்ன ஆனார் என்பது குறித்த 82 ரகசிய கோப்புகள் மத்திய அரசிடம் உள்ளன. அவை அனைத்தும் பிரதமர் அலுவலக ஆலோசனைக்குப் பிறகு, இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், நேதாஜி குறித்த ரகசிய தகவல்களை வெளியிட வேண்டும் என்று கடந்த மாதம் ராஜ்யசபையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்தார்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து 82 ரகசிய கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை வெளியிட்டால், வெளிநாடுகளுடனான இந்தியாவின் சர்வதேச உறவுகளை பெருமளவு பாதிக்கும் என்று இந்திய வெளியுறவு துறை கருத்து தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன.அதனால், அந்த ஆவணங்கள் அனைத்தும் இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டன என்று மத்திய அமைச்சர் ஹரிபாய் தனது பதிலில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement