போதை பொருள் தயாரித்து விற்றவருக்கு அபராதம்
துரைப்பாக்கம்: சென்னை அடுத்த பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் தடை செய்யப்பட்ட போதை பொருளான மாவா தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது ஒரு கடையில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்களான 200 பாக்கெட் பான்பராக், ஹான்ஸ் மற்றும் 2 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளரான ராகேஷ்குமார் (35) என்பவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அவரது தம்பியான ரமேஷ்குமார் (32) என்பவரிடம் நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.