Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
22
Nov
ஹாலிவுட் தயாரிப்பாளர் கோரிக்கையை ஏற்ற கமல்


சென்னை: ஹாலிவுட் தயாரிப்பாளர் கோரிக்கையை ஏற்று யூடியூப் சேனல் தொடங்கினார் கமல்.‘தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்‘ தயாரிப்பாளர் பேரி ஒஸ்போர்ன் கமல் பற்றி குறிப்பிடும்போது, ‘சினிமா, இலக்கியம், தயாரிப்பு, இயக்கம் என பல்வேறு துறைகளிலும் திறமைமிக்கவர் கமல். அந்த திறமையையும், அறிவும் மற்றவர்களுக்கும் பயன்படச் செய்யும் வகையில் ஒரு தொடர்பை ரசிகர்கள் மத்தியில் அவர் ஏற்படுத்தி தர வேண்டும்' என்றார். அவரது கோரிக்கையை பற்றி யோசித்து வந்த கமல் தற்போது ‘உலகநாயகன் யூ டியூப்' என்ற பெயரில் இணைய தளத்தில் யூ டியூப் சேனல் தொடங்கி இருக்கிறார்.

இதில் ஏற்கனவே 2500 பேர் சந்தாதாரர்களாகவும், 75 ஆயிரம் பேர் பார்வையாளர்களாகவும் இணைந்திருக்கின்றனர். 'தி விலாக் (வீடியோ லாக்) கேவாய்மொழி' என்ற பிளாக்கில் கமல் தனது கருத்துக்களை இதில் வெளியிட உள்ளார்.  சோதனை முறையில் இது இயங்கி வருகிறது. மேலும் இயக்குனர் ஆர்.சி.சக்தி, இசை அமைப்பாளர் ஜிப்ரான் போன்றவர்களின் கேள்வி பதில் பகுதி இடம்பெறுகிறது. அடுத்து நாசர் இதில் பதில் அளிக்கிறார். 'ஹேராம்', 'அபூர்வ சகோதரர்கள்' பற்றிய பல்வேறு தகவல்களையும் இந்த சேனலில் கமல் தெரிவிக்க முடிவு செய்திருப்பதுடன் அவரது கவிதை, இலக்கியம் சார்ந்த விஷயங்கள் பற்றியும் இதில் இடம்பெறுகிறது. ரசிகர்களின் கேள்விகளுக்கு கமல் பதில் அளிக்கும் பகுதியும் தொடங்கப்பட உள்ளது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement