விருகம்பாக்கத்தில் வீட்டை உடைத்து நகை கொள்ளை
சென்னை: விருகம்பாக்கத்தில் வீட்டை உடைத்து 11 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.விருகம்பாக்கம் வெங்கடேஷ்வரா நகர் கருமாரியம்மன் தியேட்டர் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் ரேவதி (46). இவர் நேற்று இரவு 11 மணிக்கு குடும்பத்துடன் அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அதிகாலை 1 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 11 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ரேவதி இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.