பைக் மீது லாரி மோதி சாப்ட்வேர் நிறுவன மேனேஜர் பலி
வேளச்சேரி: பெரும்பாக்கம் மெயின் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்த போது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே சாப்ட்வேர் நிறுவன மேனேஜர் உடல் நசுங்கி பலியானார். கிழக்கு தாம்பரம் காளமேகம் தெருவை சேர்ந்தவர் கணேசன் (33), சோழிங்கநல்லூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்தார். இன்று காலை பெரும்பாக்கம் மெயின் சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின் னால் இருந்து அதிவேகத்தில் வந்த லாரி பைக்கின் மீது மோதியது. இதனால் நிலைமை தடுமாறி கீழே விழுந்த போது அவர் மீது லாரி ஏறியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.