சென்னை: எனக்கு என் தந்தை எப்போது தன்னுடன் நடிக்க வாய்ப்பு தருவார் என கேட்டுச் சொல்லுங்கள் என ஏங்கினார் ஸ்ருதி ஹாசன்.இதுபற்றி அவர் கூறியதாவது:தமிழில் என்னால் நிறைய படங்களில் நடிக்க முடியாததற்கு காரணம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நான் நடித்து வருவதுதான். நான் மும்பையில் தனிமையில் வசிக்கிறேன். டைரக்டர் மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் கால்ஷீட் இல்லாததுதான். என் தங்கை அக்ஷரா இந்தியில் ‘ஷமிதாப் படம் மூலம் அறிமுகமாகிறார். அவர் திறமையானவர் என்னுடைய அறிவுரை அவருக்கு தேவைப் படாது. எனக்கு உதட்டில் அறுவை சிகிச்சை நடந்ததாக சிலர் கூறுவது தவறு. ‘என் தந்தை கமலுடன் எப்போது நடிக்கப்போகிறீர்கள்? என்கிறார்கள். இதை என்னிடம் ஏன் கேட்கிறார்கள்? அவரிடம் (கமல்)போய் கேட்டுவிட்டு எப்போது தன்னுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு தருவார் என்பதை கேட்டு சொல்லுங்கள். தமிழில் விஷாலுடன் நடித்துள்ள ‘பூஜை படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.