மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த நாஞ்சிபுரம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களும் கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, அஷ்டதிக்குபூஜை, முதல் கால பூஜை, கலச பூஜை, ஹோமம், நவக்கிரஹ பூஜை, துர்கை பூஜை, துவார பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து நேற்று காலை புனித நீர் கொண்டு வந்து கலசத்தின் மீது ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாஞ்சிபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் அனுசுயாநந்தன் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.