லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் வசிக்கும் 24 வயது வாலிபரின் நாக்கு 10.1 செ.மீ. நீளம் உள்ளது. உலகிலேயே மிக நீளமான நாக்கு கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் 24 வயது இளைஞர் நிக் ஸ்டோபெர்ல். இவர் பார்ப்பதற்கு நோஞ்சான் போல தெரிந்தாலும், தனது நாக்கின் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். எப்படி என கேட்கிறீர்களா?நிக்கின் நாக்கு, வெளியே நீட்டும் போது 10.1 செமீ நீளம் இருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே மிக நீளமான நாக்கு கொண்ட மனிதர் என்ற பெருமை கிடைத்துள்ளது. இந்த ஆண்டின் கின்னஸ் புத்தகத்திலும் இவர் இடம்பிடித்துள்ளார். நாக்கால் மூக்கை தொடுவதை சிலர் செய்து விடுகின்றனர். ஆனால் நிக், தனது நாக்கால் முழங்கையையே தொட்டு அசத்துகிறார். தனக்கு பிடித்த உணவுகளை நாக்கை நீட்டி சுவைக்கிறார். தனது சாதனை நாக்கின் மூலம் பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக நிக் கூறுகையில், ‘காலையில் எழுந்ததும் பிரஷ்ஷை வைத்து நாக்கை சுத்தம் செய்வதற்கும், நாக்கை உள்ளிழுப்பதற்கும்தான் அதிக நேரம் பிடிக்கிறது. இவரது தந்தை சிமன்ஸ் லிப் டு லிப் முத்தம் கொடுப்பதில் மிகவும் விருப்பம் அதிகம். அதனால்தானோ, அவரது மகன் நிக்கின் நாக்கு 10.1 செ.மீ. நீளத்தில் அமைந்துள்ளது என்று அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர். எனது தந்தைக்கு லிப் டு லிப் முத்தம் கொடுப்பதில் மிகவும் விருப்பம் அதிகம். அதனால் தானோ, எனது நாக்கு 10.1 செ.மீ. நீளத்தில் அமைந்துள்ளது‘ என்று நகைச்சுவையுடன் கூறி சிரிக்கிறார். இதற்குமுன் கடந்த 2002-ம் ஆண்டு பிரிட் ஸ்டீபன் டெய்லர் என்பவரின் 9.8 செ.மீ. நீள நாக்கு கின்னசில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை நிக்கின் நாக்கு முறியடித்துள்ளது.