நாட்டின் முன்னேற்றத்துக்கு பல்துறை ஆராய்ச்சிகள் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்களை உருவாக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் என்ற உயர்கல்வி நிலையத்தில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. M.Phil. (Applied Economics) படிப்புக்கு Economics / Social Sciences / Humanities / Law பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Sciences / Technology / Life Sciences HKM பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஓபிசி (என்சிஎல்) பிரிவினருக்கு அரசு விதிப்படி இடஒதுக்கீடு உண்டு. Ph.D. Programme in Economics Agriculture, Economic History, Gender - Development, Health, Poverty, Industry - Technology, Labour - Employment, Population Studies, Trade and Macro economics ஆகிய பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளலாம்.
பொருளியல் அல்லது அது சார்ந்த பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன், அதே பாடப்பிரிவில் எம்பில் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளுக்கு கல்வித்தகுதி, ஆராய்ச்சித்திறன் அடிப்படையில் விண்ணப்பங்களை பரிசீலித்து எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். எம்பில் மாணவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், பிஎச்டி மாணவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவம், விளக்க குறிப்பேடு ஆகியவற்றை www.cds.edu என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவோர் கோரிக்கை கடிதத்துடன் ரூ.200க்கான டிடியை இணைத்து அனுப்ப வேண்டும். டிடியை ‘Centre for Development Studies‘ என்ற பெயரில் திருவனந்தபுரத்தில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவை யில்லை. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘The Director, Centre for Development Studies, Thiruvananthapuram695011, Kerala‘ என்ற முகவரிக்கு வரும் மே 27க்குள் அனுப்ப வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook