இனிவரும் படங்களில் தனது பெயரை எஸ்டிஆர் என்று குறிப்பிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார் சிம்பு.
கமல் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் ‘விஸ்வரூபம்‘ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவியை கேட்டுள்ளனர்.
கோடை கால டூருக்கு எங்கு செல்ல விருப்பம்’ என்று கேட்டபோது, ஜீவா நார்வேக்கும், அமலா பால் கோவாவுக்கும், பிரியாமணி ரோமிற்கும் செல்ல விருப்பம் என்றனர்.
ஆன்ட்ரியாவுக்கு சிக்கன் சூப், கிரீன் டீ என்றால் மிகவும் பிடிக்குமாம். தினமும் சூப் குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளார் இவர்.
‘பேண்ட் பாஜா பாரத்’ இந்திப் பட ரீமேக் மூலம், கோலிவுட்டில் ரவிதேஜா அறிமுகமாவதாக செய்தி வந்தது. அதை மறுத்துள்ளார் ரவிதேஜா.
இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கும் ‘தேனீர் விடுதி‘ முழுநீள காமெடி படமாக உருவாகி உள்ளது.
|