உல்லாசத்துக்கு மறுத்ததால் மனைவியை எரித்த கணவர்
திருக்கோவிலூர்: உல்லாசத்துக்கு மறுத்ததால் மனைவியை உயிரோடு எரித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (28). இவரது மனைவி சாரதா (21). அய்யப்பன் அடிக்கடி குடித்து விட்டு வந்து சாரதாவை உல்லாசத்துக்கு அழைத்து வந்துள்ளார். இதற்கு சாரதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வந்த அய்யப்பன், மனைவியிடம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். குடித்து விட்டு வந்ததை சுட்டிக்காட்டி அவர் மறுத்து உள்ளார். ஆத்திரமடைந்த அய்யப்பன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை சாரதா மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பினார். பலத்த தீக்காயமடைந்த அவர், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப்பதிந்து, திருக்கோவிலூரில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.