திருவள்ளூர்: பூந்தமல்லி எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரியில், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில், ரூ.65 லட்சம் மத்திய அரசின் மானியத்தில் தொழில் ஊக்குவிப்பு மைய தொடக்க விழா நடைபெற்றது.இவ்விழாவுக்கு கல்லூரி தலைவர் கே.ராமதாஸ் தலைமை வகித்தார். பொருளாளர் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தார். முதல்வர் எம்.செந்தில்குமார் வரவேற்றார். இதில், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூடுதல் ஆலோசகர் எஸ்.சிவஞானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர், மாணவர்கள் தங்கள் சுயதொழில் முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகள், பண உதவிகள் குறித்து விளக்கினார். இதில் வீல்ஸ் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொது மேலாளர் சுந்தரராஜன் உட்பட இளம் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.