நந்திதா குத்தாட்டம்: பாலசந்தர் பரவசம்
சென்னை: மூத்த இயக்குனர் பாலசந்தரை நடனம் ஆட தூண்டும் விதமாக குத்தாட்டம் போட்டார் நந்திதா.பரத்-நந்திதா நடிக்கும் படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. இப்படத்தை புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் தயாரிக்கின்றனர். எல்.ஜி.ரவிசந்தர் டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது: இதுவொரு நகைச்சுவை ததும்பும் கதை. படிக்காத கணவர், படித்த மனைவியின் வாழ்க்கையை மையமாக வைத்து முதன்முறையாக சித்த வைத்திய பின்னணியில் இக்கதை சொல்லப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய டைரக்டர் கே.பாலசந்தர் குத்து பாடல்களை தன் படத்தில் வைப்பதில்லை என்றார். ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற குத்து பாடலை கேட்டபோது தனக்கே நடனம் ஆட வேண்டும் என்று தோன்றியதாக குறிப்பிட்டார். அவரது பாராட்டு படத்துக்கு பெரிய பலமாக அமைந்தது. இந்த பாடலுக்கு பரத், நந்திதா நவநாகரீக உடைகள் அணிந்து ஆடினர். புதுச்சேரியில் படமாக்கப்பட்டது என்றார்.