Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
10
Jul
ரூ.200 கோடியில் தமிழகம் உள்பட 6 இடங்களில் ஜவுளி பூங்காக்கள்


புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் ரூ.200 கோடியில் தமிழகம் உள்பட 6 இடங்களில் ஜவுளி  பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில் பொது துறை நிறுவனங்கள் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி  முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கூடுதலாக 6 ஜவுளி பூங்காக்கள் நிறுவப்படும். வாரணாசியில் கைத்தறியை ஊக்குவிக்க வர்த்தக மையம்  அமைக்கப்படும். தமிழகம் மற்றும் மைசூர், ரேபரேலி, லக்னோ, சூரத், பகல்பூர் ஆகிய 6 இடங்க ளில் ரூ.200 கோடியில் இந்த ஜவுளி பூங்கா அமைக் கப்பட  உள்ளது.நிலமற்ற 5 லட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடன் வசதி செய்து தரப்படும். நாடு முழுவதும் மண் பரிசோ தனை மையங்கள் அமைக்க ரூ.56  கோடி நிதி ஒதுக்கப்படும்.

16 துறைமுகங்கள்  இரண்டாம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களில் தனியார் பங்களிப்புடன் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் சுற்றுலா  பயணிகள் வசதிக்காக 9 விமான நிலையங்களில் இ விசா முறை அறிமுகம் செய்யப்படும். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க உள்கட்டமைப்பு  முதலீட்டு அறக்கட்டளை உருவாக்கப்படும். இதன் மூலம் வங்கிகளின் சுமை குறைக்கப்படும். நாடு முழுவதும் 16 புதிய துறைமுகங்கள் அமைக்கப்படும். இந்த  திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.கேஸ் பைப் லைன்மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டம் சீரமைக்  கப்படும். தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிற்காக ரூ.50 ஆயிரத்து 548 கோடியில் புதிய திட்டங்கள் வகுக்கப்படும். 15 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு புதிய கேஸ் பைப் லைன்  தனியார் பங்களிப்புடன் அமைக்கப்ப டும். தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் சூரிய ஒளி மின்சார திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும். பிரதம மந்திரி கிராம  சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.11 ஆயிரத்து 389 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement