ராணுவத்துக்கு ரூ2.29 லட்சம் கோடி
பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.2.29 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அருண்ஜெட்லி கூறியதாவது: ராணுவத்துக்கு புதிய நவீன ரக ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகள் வாங்குவதற்கு ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த பட்ஜெட்டை விட ரூ.5 ஆயிரம் கோடி அதிகம் ஆகும். ராணுவத்தினரின் ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் திட்டத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்தியா கேட் அருகே உள்ள பிரின்சஸ் பூங்காவில் போர் அருங்காட்சியகத்துடன் கூடிய போர் நினைவு சின்னம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையங்களை மேம்படுத்த ரூ.2250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக்ரா, மதுரா போன்ற நகரங்களில் உள்ள பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.