மேலும் 4 இடங்களில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை
டெல்லியை போல மேலும் 4 இடங்களில் ‘எய்ம்ஸ்‘ மருத்துவமனைகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பூர்வாஞ்சலில் இந்த மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது. பட்ஜெட்டில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:பிரதான் மந்திரி கிருஷி சிசியன் யோஜனா என்ற பெயரில் புதிய நீர் பாசன திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க உறுதி அளிக்கப்படுகிறது. 2019ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதி செய்து தரப்படும்.கிராமப்புறங்களில் மின்சார வசதியை மேம்படுத்த தீனதயாள் உபாத்யாய் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் சர்தார் படேல் சிலைக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு.பார்வையற்றோர் பயன் பெற புத்தகங்கள் தயார் செய்ய 15 பிரெய்ல் மொழி அச்சகங்கள் தொடங்கப்ப டும். ஏற்கனவே உள்ள 10 அச்சகங்கள் சீரமைக்கப்ப டும். அஞ்சலகத் திட்டங்களில் கேட்பாரற்று கிடக்கும் பணத்தை தேவையான திட்டங்களுக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க கமிட்டி அமைக்கப்படும். பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு ரூ.100 கோடி டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். நிருபயா திட்டத்தில் இருந்து இதற்கான நிதி பெறப்படும். தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்கு ரூ.3600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.