அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை: பொது, தொழில் பிரிவுக்கு கவுன்சலிங்
சென்னை: அண்ணா பல்கலையில் பொது பிரிவு மற்றும் தொழில் பிரிவுக்கான கவுன்சலிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 7ம் தேதி துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று 4 ஆயிரத்து 884 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில், 3,837 பேர் இடங்களை தேர்வு செய்தனர். 1,021 மாணவர்கள் வரவில்லை. 26 மாணவர்கள் திரும்பி சென்றனர். கலந்தாய்வு ஒன்பது பிரிவுகளாக நடைபெற்றது. இவர்களுக்கான கவுன்சலிங் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும். மேலும், நேற்று முதல் தொழில் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், 250 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். 241 பேருக்கு இட ஒருக்கீடு செய்யப்பட்டது. 9 மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை. இவர்களுக்கான கவுன்சலிங் வரும் 18ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல், முதலாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும்.