சிங்கப்பெருமாள் கோவிலில் பாஜ கொண்டாட்டம்
செங்கல்பட்டு: பாஜ தேசிய தலைவராக அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பாஜ இளைஞரணி சார்பில் சிங்கப்பெருமாள் கோவில் பஜார் பகுதியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும், குஜராத் மாநில முன்னாள் அமைச்சருமான அமித்ஷா, பாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக ஆட்சி மன்றக்குழுவில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜ தேசிய தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து அமித்ஷா புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை நாடு முழுவதும் பாஜவினர் கொண்டாடி வருகின்றனர். சிங்கப் பெருமாள் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை அணி மாநில செயலாளர் ஆரோக்கியசாமி, ஒன்றிய தலைவர் தனசேகரன், ஒன்றிய இளைஞரணி தலைவர் விஜயகுமார், மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், ஒன்றிய துணைத் தலைவர் மகேஸ்வரன், தொகுதி செயலாளர் ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.