வேட்டி, சேலை திட்டத்துக்கு ரூ 486 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு 486 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:2014ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட புதிய ரக சேலைகள் பொதுமக்களிடையே பெருமளவில் வரவேற்பினை பெற்றுள்ளதால், வரும் 2015 பொங்கல் பண்டிகைக்கும் இதே ரகத்தில் பாலிகாட் சேலைகள் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன்படி 2015ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கடந்த ஆண்டினை போல் 1,73,23,000 சேலைகளும், 1,72,05,000 வேட்டிகளும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்து வழங்கிட 486 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் முதல்கட்டமாக, கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு முன்பணம் வழங்க 240 கோடியே 55 லட்சம் ரூபாய் நிதியினை விடுவித்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.