கோலிவுட் வர இருந்த ஹீரோயின் திடீர் திருமணம்
சென்னை: தமிழ் படத்தில் நடிக்க முடிவு செய்த நடிகை ஷிரிதா சிவதாஸ் திடீரென்று பாய் பிரண்டை மணந்துகொண்டார். மலையாளத்தில் ஆர்டினரி, மணி பேக் பாலிசி, ஹேங் ஓவர், கூதரா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் ஷிரிதா சிவதாஸ். ஆனால் எதிர்பார்த்தளவுக்கு பெரிய வேடம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தார். இது குறித்து அவர் கூறும்போது,‘மலையாள படங்களில் எனக்கு கிடைக்கும் வேடங்கள் திருப்தி தரவில்லை. எனவே நான் தமிழ் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இவர் தனது பாய் பிரண்டும், பாடகருமான தீபக் நம்பியாரை நேற்றுமுன்தினம் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். கடந்த சில வருடமாக இருவரும் காதலித்து வந்தனர். வைதீக முறைப்படி எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.