இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் டிரெண்ட் : பிரிட்ஜில் இன்று துவக்கம்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் இன்வெஸ் டெக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் டிரென்ட் பிரிட்ஜ்நகரில் இன்று துவங்குகிறது. மூன்றாண்டுகளுக்கு முன் இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அணியில் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், ஆட்டமோ ஒரு தரப்புக்கு சாதகமாக அமைந்துவிட்டது. மிகச்சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி தொடரை வென்றது. இந்தியா தோல்வி முகத்துடன் நாடு திரும்பியது. ஆனால், இப்போது இந்திய அணியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சச்சின், டிராவிட் போன்ற பெரும் தலைகள் இல்லை. ஆனால், எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா போன்ற புதிய நட்சத்திரங்கள் தலையெடுத்துள்ளனர்.பந்து வீச்சை பொருத்தவரை இங்கிலாந்து பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. லியாம் பிளங்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் சிறந்து விளங்குகின்றனர்.