Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
08
Jul
பயிற்சியாளருக்கு மிரட்டல்: வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப்புக்கு 6 மாத தடை


ஒழுங்கீனமான செயல்பாடு களுக்காக வங்கதேச நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க 6 மாத தடை விதித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. 2006ம் ஆண்டில் வங்கதேச அணியில் இடம் பெற்ற ஷாகிப் அல்ஹசன், 134 ஒரு நாள் போட்டிகளிலும், 34 டெஸ்ட் போட் டிகளிலும் விளையாடியுள்ளார். படிப்படி யாக அணியில் நட்சத்திர வீரராக மாறிய அவர் கேப்டனாகவும் செயல் பட்டுள்ளார்.

இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெறாமல் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்க பார்படாஸ் புறப்பட்டுச் சென்ற நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் மீது வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.வங்கதேச அணியின் பயிற்சியாளர் சந்திகா ஹதுரசிங்கவிடம் மோசமாக நடந்து கொண்டதற்காக 2015ம் ஆண்டின் இறுதிவரை ஷாகிப் அல்ஹசன் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தடையின்மை சான்று வழங்குவதில்லை எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

வங்கதேச அணி விரைவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் ஆகஸ்ட் 1 முதல் நடக்க உள்ளது. வரும் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதிவரை நடைபெற உள்ள கரீபியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்க சென்றுள்ள ஷாகிப் அல் ஹசன், பயிற்சி முகாமில் பங்கேற்க வங்கதேசம் திரும்பு மாறு பயிற்சியாளர் ஹதுரசிங்க கேட்டுக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷாகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இது அவருக்கு தடை விதிக்கப்படக் காரணமாக அமைந்தது.இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நசிமுல் ஹசன் கூறுகையில், நாங்கள் தெளிவான தகவலைத் தெரிவித்துள் ளோம். இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப் படக்கூடும். ஒழுக்கத்தைப் பொருத்தவரை எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை, என்றார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement