பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை தொடர், விறுவிறுப் பான கட்டத்தை எட்டியுள்ளது. நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற 8 அணி கள், காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று நடக் கும் முதல் கால் இறுதி போட்டியில் ஜெர்மனியை எதிர்த்து பிரான்ஸ் அணி விளையாடுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இவ்விரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை. ஜெர்மனி அணி 3 முறையும், பிரான்ஸ் அணி ஒரு முறையும் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளன. கடந்த 1982ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அரை இறுதி போட்டி வரை இரு அணிகளும் முன்னே றின. ஆனால் அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் பெனால்டி ஷூட்டில் பிரான்ஸ் வீழ்ந்தது. அதற்கு பழி வாங்கும் வகையில் இன்றைய ஆட்டத்தை பிரான்ஸ் பயன்படுத்தி கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், காலிறுதி போட்டியிலேயே அந்த அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அணி யைச் சேர்ந்த 7 வீரர்களுக்கு புளூ காய்ச்சல் அறிகுறி இருப்பதை அணியின் பயிற்சியாளர் ஜோகின்லோ உறுதி செய்துள்ளார். ‘‘7 வீரர்களுக்கு புளூ காய்ச்சல் அறிகுறி உள்ளது. ஆனால் உரிய சிகிச்சை பெற்று முழு தெம்புடன் கால் இறுதி போட்டியை எங்கள் வீரர்கள் எதிர்கொள்கின்றனர்,’’ என பயிற்சியாளர் லோ கூறியுள்ளார். ஏற்கனவே நாக் அவுட் சுற்றில் அல்ஜீரிய அணிக்கு எதிரான போட்டியின் போது காய்ச்சல் காரணமாக முன்னணி வீரர் மேக்ஸ் ஹம்மல்ஸ் விளையாடவில்லை. தற்போது தாமஸ் முல்லர், மிட் பீல்டர் கிறிஸ்டோப், கிரேமர் ஆகியோர் புளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த அணியின் உதவி பயிற்சியாளர்களில் ஒருவரான ஆண்டி ரிஸ் கோகே உறுதி செய்துள்ளார்.