கமலை கண்டு நடுங்கி தவறி விழுந்த பார்வதி
சென்னை: கமலை கண்டு நடுக்கத்தில் தவறி விழுந்தார் பார்வதி.ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ‘உத்தம வில்லன். இதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், பார்வதி நாயர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்கின்போது கமல் முன்னிலையில் நடிக்க பயந்து தவறி விழுந்தார் பார்வதி நாயர். இதுபற்றி பார்வதி கூறும்போது,‘இப்படத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த பெரிய அனுபவம். கமலுடன் சில காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. உடன் நடிப்பவர்களின் பயத்தை போக்குவதில் அவர் சிறந்தவர். சில காட்சிகளின்போது இப்படி நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை கூறினார். அது எனக்கு உதவியாக இருந்தது. நான் நடித்த படங்களிலேயே இது மிகவும் சிறந்த படம். ஒரு காட்சியில் கமல் முன்னிலையில் நடிக்க வேண்டி இருந்தது. எனக்கு மிகவும் நடுக்கமாக இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி விழுந்துவிட்டேன். அதைப் பார்த்தவுடன் ஓடிவந்த கமல் என்னை தூக்கி நிற்க வைத்தார். இவ்வாறு பார்வதி நாயர் கூறினார்.