வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து 84 லட்சம் பேர் காத்திப்பு
சென்னை: 2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 84 லட்சத்து 38 ஆயிரத்து 439 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 43 லட்சத்து 12 ஆயிரத்து 510 பேர் பெண்கள் ஆவர்.இளங்கலை பட்டப்படிப்பில் கலை பிரிவில் 3,74, 569 பேரும், இளங்கலை அறிவியல்& 4, 68, 738 பேர், இளங்கலை வணிகவியல்& 2,90,824 பேர், இளங்கலை பட்டப்படிப்பு ஆசிரியர் இளங்கலை ஆசிரியர்கள்& 3,48,458 பேர், இளங்கலை இன்ஜினியரிங்& 2,12,656 பேர், மருத்துவம்& 8720 பேர், வேளாண்மை கல்வியல் & 3747 பேர், கால்நடை மருத்துவம்& 1877 பேர், இளங்கலை சட்டம்& 2796 பேரும் அடங்குவர்.அதே போல, முதுகலைப் பட்டப்படிப்பில் கலை பிரிவில் 76,985 பேர், அறிவியல்& 84,689, வணிகவியல்& 34,867, முதுநிலை ஆசிரியர்கள்& 1,85,011, இன்ஜினியரிங்& 31,168, மருத்துவம் 371, வேளாண்மை கல்வியியல்& 858, கால்நடை மருத்துவம்& 89 , சட்டம்&321 பேர் அடங்குவர்.10ம் வகுப்பு படிப்புக்கு கீழே 6,63,177 பேரும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்& 38,12,762. பிளஸ் 2 முடித்தவர்கள்& 27,72,616. டிப்ளமோ(இன்ஜினிரியரிங்)& 1,98,600 பேர், டிப்ளமோ(இதர படிப்புகள்)& 88561, ஆசிரியர் பயிற்சி& 2,13,813 பேரும் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.