சென்னை:ரஜினிக்காக பஞ்ச் எழுதவில்லை ஆனால் அவர் எது பேசினாலும் அது பஞ்ச் வசனமாகிவிடும் என்றார் டைரக்டர் ரவிக்குமார்.ரஜினி படங்களில் மட்டுமே இடம்பெற்று வந்த பஞ்ச் வசனம் நாளடைவில் சக ஹீரோக்கள் தொடங்கி காமெடியன்கள் வரை பஞ்ச் வசனம் பேச தொடங்கிவிட்டனர். இதையடுத்து பஞ்ச் வசனம் பேசுவதை நிறுத்தி கொண்டார் ரஜினி. தற்போது நடித்து வரும் ‘லிங்கா’ படத்திலும் பஞ்ச் வசனம் எழுத வேண்டாம் என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டுக்கொண்டார் ரஜினி.
இதுபற்றி இயக்குனர் ரவிக்குமார் கூறும்போது, ‘படத்தில் பஞ்ச் வசனம் இருக்கும். ஆனால் அது பஞ்ச் வசனம்தான் என்று தெளிவாக தெரியாத அளவுக்குதான் இருக்கும். இந்த வசனத்தை ஒரு முறைக்கு மேல் மறுமுறை ரஜினி பேச மாட்டார். முந்தைய படங்களில் பஞ்ச் வசனம் என்றால் அதை படம் முழுவதும் பல இடங்களில் ரஜினி பேசுவார். ஆனால் இப்போது ரஜினி எந்த வசனத்தை பேசினாலும் அது தானாகவே பஞ்ச் வசனமாகிவிடுகிறது' என்றார்.‘லிங்கா’ படத் தின் ஷூட்டிங் 70 சதவீதம் முடிந்துவிட்டது. தற்போது ஐதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் 40 நாள் இடைவிடாமல் ஷூட்டிங் நடக்கிறது. இதில் ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹாவும் கலந்துகொண்டு நடிக்கின்றனர்.