அமெரிக்க கடற்படையில் பெண் தளபதி நியமனம்
வாஷிங்டன்:அமெரிக்க கடற்படையில் முதல் முறையாக உயர்மட்ட தளபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் கடற்படையில் உயர்மட்ட தளபதிகள் பொறுப்பில் இதுவரை பெண்கள் இருந்ததில்லை. தற்போது உயர்மட்ட தளபதியாக பெண் ஒருவரை அமெரிக்க அரசு முதல் முறையாக நியமித்துள்ளது. கடற்படையில் 32 ஆண்டுகள் பணியாற்றிய மைக்கேல் ஜெனைன் ஹோவர்ட் என்பவருக்கு இந்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடற்படை தளபதியான ஆடம் ஜோனாதன் கிரீனர்ட் என்பவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் 4 நட்சத்திர அந்தஸ்து கொண்ட தளபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1978ம் ஆண்டு தனது கொலராடோ மாகாணத்தில் உள்ள அரோராவில் உள்ள கல்லூரியில் மைக்கேல் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1982ம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் இணைந்து அங்கும் பட்டம் பெற்றார். பின்னர், அவர் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்க கடற்படையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். மைக்கேல் ஹோவர்ட்தான் 1999ல் அமெரிக்க கடற்படையில் நியமிக்கப்பட்ட முதல் அமெரிக்க ஆப்ரிக்க பெண் கமாண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.