சிட்டத்தூரில் கட்டியுள்ள ரேஷன் கடையை திறக்க மக்கள் கோரிக்கை
திருவள்ளூர்திருவள்ளூர் அருகே சிட்டத்தூரில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்கவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.திருவள்ளூர் ஒன்றியம் கீழானூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிட்டத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை கடந்த 20 வருடமாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் இடியும் நிலையில் இருந்ததால் கடந்த 2012ம் ஆண்டு, 5 லட்ச ரூபாய் செலவில் ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் ரேஷன் கடையை திறக்கவில்லை. இதனால் புது கட்டிடமும் சேதம் அடைந்து வருகிறது. பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்கு செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, புதிய ரேஷன் கடையை விரைவில் திறக்க வேண்டும் என்று சிட்டத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.