பைக் மீது பஸ் மோதல் வாலிபர் தலை நசுங்கி பலி
ஆவடிஅம்பத்தூர் லெனின் நகரில் வசித்தவர் அந்தோணி சேவியர் (32). அம்பத்தூர் தொழில் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். நேற்று இரவு வேலை முடிந்ததும் பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அம்பத்தூர் டிடிஎச் சாலை ராமர் கோயில் அருகில் பின்னால் வந்த மாநகர பஸ் திடீரென பைக் மீது மோதியது. இதில் அந்தோணி சேவியர் பஸ் சக்கரத்தில் சிக்கினார். தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.