தங்கம் விலை கிடுகிடு பவுனுக்கு $248 உயர்வு
சென்னை:சென்னை மார்க்கெட்டில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலையில் பவுனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தும் விதமாக கடந்தவருடம், தங்கத்தின் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை தொட்டது. கொஞ்சம், கொஞ்சமாக விலை உயர்ந்து பவுனுக்கு ரூ.22 ஆயிரம் வரையும் அதிகரித்தது.
கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், தங்கம் மீண்டும் பவுனுக்கு 21 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இறங்கி, பின்னர் ஒரு வாரத்தில் மீண்டும் விலை அதிகரித்தது. பழையபடி கடந்த மாதம் பவுனுக்கு 21 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின், தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,660 என்று பவுனுக்கு ரூ.21,280க்கு விற்பனையானது. இன்று காலை தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.31 உயர்ந்து, கிராம் ரூ.2691 என்று ஒரு பவுன் ரூ.21,528க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 உயர்ந்திருப்பது தங்கம் வாங்குபவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.