பிஇ, டிப்ளமோ பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கல்பாக்கம் பாவினி நிறுவனத்தில் 54 காலியிடங்கள்
கல்பாக்கம்
அணு மின் நிலையத்தின் கீழ் செயல்படும் 'Bharatiya Nabhikiya Vidyut Nigam
Ltd' நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடம்
இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம்:
1. மெடிக்கல் ஆபீசர்/ டி (மருத்துவர்):
1 இடம் (பொது)
சம்பளம்:
ரூ.50 ஆயிரம் (தோராயமாக), ரூ.15,600 - 39,100, தர ஊதியம் ரூ.6,600 மற்றும் நடைமுறை தொழில் இல்லாததால் 25 சதவீத படிகள்.
வயது:
1.7.2025 அன்று 35க்குள்.
தகுதி:
எம்.டி., (பொது மருத்துவம்) அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
2. டெக்னிக்கல் ஆபீசர்/ சி:
14 இடங்கள் (பொது - 8, எஸ்சி - 3, எஸ்டி - 3).
இவற்றில்
இன்ஜினியரிங் பாட வாரியாக மெக்கானிக்கல் பிரிவில் 6 இடங்களும்,
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் 6 இடங்களும்,
எலக்ட்ரிக்கல் பிரிவில் 2 இடங்களும் உள்ளன.
தகுதி:
60 சதவீத தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டம்.
வயது:
1.7.2025 அன்று 30க்குள்.
சம்பளம்:
ரூ.42 ஆயிரம் (தோராயமாக) ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
3. சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி:
20 இடங்கள் (பொது - 10, எஸ்சி - 4, எஸ்டி - 4, ஓபிசி - 2).
இவற்றில்
மெக்கானிக்கல் பிரிவில் 9 இடங்களும், எலக்ட்ரிக்கல் மற்றும்
எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 6 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்
பிரிவில் 2 இடங்களும், இன்ஸ்ட்ரூமென்டேசன் பிரிவில் 2 இடங்களும்,
கம்ப்யூட்டர் பிரிவில் ஒரு இடமும் உள்ளன.
சம்பளம்:
ரூ.27,000 (தோராயமாக). ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
வயது:
1.7.2025 அன்று 18 முதல் 30க்குள்.
தகுதி:
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ இன்ஜினியரிங்.
4. அசிஸ்டென்ட் கிரேடு - 1:
19 இடங்கள் (பொது - 14, ஒபிசி - 3, எஸ்சி - 2).
இவற்றில் ஹெச்.ஆர். துறையில் 11 இடங்களும், எப் அண்ட் ஏ துறையில் 6 இடங்களும், சி அண்ட் எம்எம் துறையில் 2 இடங்களும் உள்ளன.
சம்பளம்: (தோராயமாக) ரூ.19,800. ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
தகுதி:
ஹெச்.ஆர்.
துறைக்கு: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு
பட்டப்படிப்புடன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் வீதம் டைப் செய்யும் திறன்
பெற்றிருக்க வேண்டும். 6 மாத எம்.எஸ். ஆபீஸ் படிப்பை முடித்திருக்க
வேண்டும். 'எப் அண்ட் ஏ' துறைக்கு: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன்
பி.காம்., பட்டம். நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன்
பெற்றிருப்பதோடு 6 மாதத்திற்கு குறையாத எம்.எஸ். ஆபீஸ் படிப்பை
முடித்திருக்க வேண்டும்.
'சி அண்ட் எம்எம்' துறைக்கு: இயற்பியல்/
வேதியியல்/ கணிதம் பாடப்பிரிவில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன்
பி.எஸ்சி அல்லது பி.காம்., மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்
செய்யும் திறனோடு 6 மாத கம்ப்யூட்டர் கோர்ஸ் எம்.எஸ். ஆபீஸ் முடித்திருக்க
வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது
மற்றும் ஒபிசியினருக்கு (மெடிக்கல் ஆபீசர் - டி, டெக்னிக்கல் ஆபீசர் - சி
ஆகிய பணிகளுக்கு ரூ.200, சயின்டிபிக் அசிஸ்டென்ட்/ பி பணிக்கு ரூ.150,
அசிஸ்டென்ட் கிரேடு - 1 பணிக்கு ரூ.100). எஸ்சி., எஸ்டி மாற்றுத்திறனாளிகள்
விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணத்தை செலுத்தும் முறை
குறித்து அறிய இணையதளத்தை பார்க்கவும். மெடிக்கல் ஆபீசர் பணிக்கு
நேர்முகத்தேர்வு அடிப்படையிலும், மற்ற 3 பணிகளுக்கும் எழுத்துத்தேர்வு,
நேர்முகத்தேர்வு அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.bhavinionline.in அல்லது www.bhavini.co.in அல்லது www.bhavini.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.7.2014.