கமல் நடிக்கும் தெலுங்கு படம்
சென்னை:டைரக்டர் தேஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார் கமல்.கமல்ஹாசன் எழுதி இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2' முடிந்து சில வாரங்களில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. மலையாளத்தில் மோகன் லால் நடித்த ‘திரிஷ்யம்' என்ற தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார்.இதற்கிடையில் டோலிவுட் பட இயக்குனர் தேஜா இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கமல். ‘ஹோரா ஹோரி' என இப்படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குனர் கூறியதாவது:விரைவில் இதற்கான படப்பிடிப்பை தொடங்க உள்ளோம். பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஷூட்டிங் தொடங்க எண்ணி உள்ளோம். அப்போதுதான் நிஜ மழை வரும்போது ஷூட்டிங் நடத்த இயலும். மழைக்காலத்தையொட்டி இக்கதை களம் அமைந்திருக்கிறது, எனவே மழைக்காலத்தில் ஷூட்டிங் நடத்துவது பொருத்தமாக இருக்கும். இவ்வாறு தேஜா கூறினார்.