விம்பிள்டன் டென்னிஸ் நான்காவது சுற்றில் ரோஜர் பெடரர்
லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் 7 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றவரான சுவிட்சர்லாந்தில் ரோஜர் பெடரர், கொலம்பியாவின் சாண்டியாகோ ஜிரால்டோவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார் பெடரர். நான்காம் சுற்றில் பெடரர், ஸ்பெயின் நாட்டின் ரொபரேடோவுடன் மோத உள்ளார். ஆட்டத்தின் போது பலத்த மழை பெய்ததால், அரங்கின் மேற்கூரை மூடப்பட்டது. கனடாவின் மிலாஸ் ரோனிச், ஆஸ்திரேலியாவின் கிர்குஸ், ஸ்பெயின் வீரர் ரோப்ரெடோ ஆகியோரும் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினர்.